யாழ். பல்கலைக்கழகத்தில் அழிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள்
யாழ். பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் இருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் காலாவதியான நிலையில் அண்மையில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் சிகிச்சைக்காக செல்கின்ற போது அவர்களுக்கு மருந்துகள் சரியாக வழங்கப்படாமல் விடுதல், மருந்துகளை வெளியே வாங்குமாறு எழுதி கொடுத்தல் போன்ற செயற்பாடுகளால் இந்த மருந்துகள் இவ்வாறு காலாவதியாகிய நிலையில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலாவதியான மருந்துகள்
குறித்த மருந்துகள் காலாவதி திகதியை நெருங்குகிறது என தெரிந்தவுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான ஒரு தொகை மருந்துகளை வைத்துக்கொண்டு ஏனைய மருந்துகளை வேறு வைத்தியசாலைகளுக்கு வழங்கியிருந்தால் குறித்த மருந்துகள் இவ்வாறு நிலத்தில் புதைப்பதை தடுத்திருக்க முடியும் என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் காலாவதியாகிய மருந்துகள் தொடர்பான விடயங்கள் கசக்கி வீசப்பட்ட audit report மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் யாழ். பல்கலைக்கழக சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவச் சேவைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மாணவர்களின் தொடர் முறைப்பாடுகள்
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுகாதார நிலையங்கள் மற்றும் அவற்றின் சேவைகள் தொடர்பில் மாணவர்களின் தொடர் முறைப்பாடுகளையடுத்து அவை தொடர்பில் தங்களிற்கு இக்கடித்தின் வாயிலாக கொண்டு வருவதோடு, விரைந்த மற்றும் உடனடி நடவடிக்கையை கோரி நிற்கின்றோம்.
1. பல்கலைக்கழக முதன்னை வளாகத்திலுள்ள சுகாதார நிலையம். இராமநாதன் கட்புல மற்றும் நுண்கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம் ஆகியன முதன்மை வளாகத்திலிருந்து புறம்பாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பீடங்களின் மாணவர்களுக்கென்று தனியான மருத்துவ சேவை வசதிகள் தற்போது வரையில் அமைக்கப்படவில்லை. இட அமைவு காரணமாக இரண்டு பீடங்களின் மாணவர்களும் நோய் நிலைமைகளுடன் பயணம் செய்து மருத்துவச் சேவைகளினைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாதவொரு காரணமாகும்.
2. சுகாதார நிலையம் கிளிநொச்சி விவசாய, பொறியியல், தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கான சுகாதார நிலையம் கிளிநொச்சியில் தனியாகக் காணப்படுகின்றது.
குறித்த சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவைகள் தினமும் மாலை 04.30 மணி மாலை 06.30 மணி வரையில் இடம்பெறுகின்றது.
a. வரையறுக்கப்பட்ட சேவை நேரம் என்பது மாணவர்களிற்கு பெருத்த இடர்பாடுகளினை ஏற்படுத்துகின்றது. முதன்மை வளாகத்தில் முழுநேர வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுகின்ற நிலையிலேயே கவனிப்பதென்பது நோயாளர்களைக் கடினமாகவுள்ள நிலையில், மூன்று பீடங்களை உள்ளடக்கிய கிளிநொச்சி மருத்துவ இரண்டு நிலையத்தில் மணித்தியாலங்களிற்குள் எவ்வாறு நேர்த்தியாக சேவையினை வழங்க முடியும்?
b. நோயாளர்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தற்பொழுது இந்த நாட்களில் இந்த மாணவர்கள் என்று நேர அட்டவணை வழங்கப்பட்டு மருத்துவம் இடம்பெறுகின்றது.
நோய் அல்லது சுகவீனம் இந்த தினங்களில் தான் தொற்றுவேன் என்று முன்னறிவிப்புச் செய்துவிட்டு வருவது போன்று இந்த நேர அட்டவணை முறைமை முன்னெடுக்கப்படுகின்றது.
C. நோயாளர்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தற்பொழுது இந்த நாட்களில் இந்த மாணவர்கள் என்று நேர அட்டவணை வழங்கப்பட்டு மருத்துவம் இடம்பெறுகின்றது.
நோய் அல்லது சுகவீனம் இந்த தினங்களில் தான் தொற்றுவேன் என்று முன்னறிவிப்புச் செய்துவிட்டு வருவது போன்று இந்த நேர அட்டவணை முறைமை முன்னெடுக்கப்படுகின்றது.
d. தாதியர்கள் காலை 9 மாலை 4 மணி வரையில் கடமையில் ஈடுபடுகின்ற நிலையில், மருத்துவருடைய வருகையும் கடமையும் மாலை 4.30 6.30 மணிக்கு இடையில்த் தான் நிகழ்கின்றது. மருத்துவர் கடமையில் இல்லாத நேரத்தில் (காலை 9 மாலை 4 மணி) சுகாதார நிலையத்தில் தாதியர்களிற்கு என்ன கடமை எனும் கேள்வி இயல்பில் எழுகின்றது.

அத்தியாவசிய மருத்துவ சேவை
மேலும் மருத்துவர் பணியில் ஈடுபடும் நேரத்தில் (மாலை 4.30 6.30 மணி) தாதியர்களிற்கு கூடுதல் வேலை நேரம் (Over Time) வழங்கப்படுகின்றது.
c. கிளிநொச்சி வளாகத்தில் பீடங்களினை அமைத்த நாள் முதல் Carder உருவாக்கப்படவில்லை. University Medical Officer
f. அத்தியாவசியச் சேவையான மருத்துவ சேவையில், தற்போது வரையில் ஏன் நிரந்தர பணியிடம் உருவாக்கப்படவில்லை. பல்கலைக்கழகம் நிறுவப்படும் போது உருவாக்கப்படும் போது இருந்த University Medical Officer பணியிடங்களிற்கு மேலதிகமாக உருவாக்கப்படவில்லை.
தற்போது பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசியச் சேவையான மருத்துவச் சேவைப் பணியிடங்கள் மீளாய்வு செய்து உருவாக்கப்படவில்லை என்பது மாணவர்களின் சுகாதார நலனில் நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினையே வெளிப்படுத்துகின்றது.
மாணவர்களின் நலன்சேவைகள் தொடர்பான பணியிடங்கள், நியமனங்கள் காலதாமதங்களின்றி நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் மாணவர்கள் தரப்பின் அழுத்தங்கள் வரும் வரையில் காத்திராது, உரிய காலத்தில் மாணவர் நலன்சார்ந்த பணிகளை ஆற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினை வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.