யாழ். மாம்பழ உற்பத்தி வலயத்திற்கு விவசாய அமைச்சர் விஜயம்(Photos)
யாழ்ப்பாணத்தில் உள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பார்வையிட்டுள்ளார்.
யாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் கிராமத்தில் உள்ள மாம்பழ உற்பத்தி வலயத்தை மகிந்த அமரவீர இன்று (15.10.2023) பிற்பகல் சென்று பார்வையிட்டுள்ளார்.
மாம்பழ உற்பத்தி
கடந்த 2018ஆம் ஆண்டு விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மேற்படி மாம்பழ உற்பத்தி வலயமானது 500 செய்கையாளர்களை உள்ளடக்கியுள்ள நிலையில் விவசாய அமைச்சர் செய்கையாளர்களைச் சந்தித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதன்போது விவசாயிகள், குரங்குகளை கட்டுப்படுத்த வாயுத் துப்பாக்கி,வீதிப் புனரமைப்பு மற்றும் மாம்பழத்தை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான அங்கஜன் இராமநாதனுடைய ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan