யாழில் தவறான முடிவெடுத்த 27 வயது நபர் - பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் தவறான முடிவெடுத்து 27 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சென் செபஸ்டியார் வீதி, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இவர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் தவறான முடிவெடுத்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
தேடிய சகோதரி
இந்நிலையில் நேற்று முன் தினம் (10.04.2026) வேலை முடிந்து வந்து சாப்பிட்டுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார்.
இரவு 10 மணிவரை அவர் திரும்பி வராத காரணத்தால் அவரது சகோதரி அவரை தேடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam