கோப்பாய் கோவையம்பதி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பூங்காவன திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - கோப்பாய் கோவையம்பதி பலானை கண்ணகி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பூங்காவனத் திருவிழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (23) பக்தர்களின் பத்தி கோஷங்களுடன் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
இதன்போது, கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ கோவையம்பதி பலானை கண்ணகி அம்மனுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
விசேட பூஜைகள்
அதனைத் தொடர்ந்து, வசந்தமண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் கண்ணகியம்மனுக்கு 1008 பழங்களினாலான அலங்கார திருவாசியிலான மாலை அணிவிக்கப்பட்டு, அம்பாள் எழுந்தருளியா உள்வீதியுடாக வலம் வந்து பூத்தண்டிகை வாகனத்தில் வெளிவீதியூடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு சித்திகளை பெற்றுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான் ஆதங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



