யாழ்.சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பித்து வைப்பு(Photos)
யாழ்.சர்வதேச வர்த்தகச் சந்தை 12வது தடவையாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் தலைவர் நந்தரூபன் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் பங்கேற்புடன் எல்.ஈ.சி.எஸ் (LECS) நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன தர்மதாஸ தலைமையில் வர்த்தக சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதேவேளை குறித்த கண்காட்சி நாளை காலை 9.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஏனைய விருந்தினர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும் 23ம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து
எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக
மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள
இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.








TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
