யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Jaffna Sri Lanka Jaffna International Airport Northern Province of Sri Lanka
By Theepan Oct 30, 2024 07:13 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (29) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் (Nagalingam Vethanayagam) தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடிய வகையில், விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

பணம் அச்சிடுதல் தொடர்பாக மத்திய வங்கி அளித்துள்ள விளக்கம் - செய்திகளின் தொகுப்பு

பணம் அச்சிடுதல் தொடர்பாக மத்திய வங்கி அளித்துள்ள விளக்கம் - செய்திகளின் தொகுப்பு

விமான நிலைய அபிவிருத்தி

அத்துடன், விமான நிலைய அபிவிருத்தி, விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் | Jaffna International Airport Development Meeting

மேலும், விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாதவாறு விமான நிலையம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி செய்தல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச சபைக்கு ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மாடுகள் களவாடப்படும் அவல நிலை

மட்டக்களப்பில் மாடுகள் களவாடப்படும் அவல நிலை

எதிர்கால திட்டமிடல்

அத்தோடு, 1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் | Jaffna International Airport Development Meeting

மேலும், விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோபாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்கப் போவதாக மிரட்டிய நபர் தொடர்பாக தீவிர விசாரணை

யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்கப் போவதாக மிரட்டிய நபர் தொடர்பாக தீவிர விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US