யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரகம் மாற்று சிகிச்சை வெற்றி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியத் துறையினரதும் பங்கேற்புடன் கடந்த 18ஆம் திகதி நீண்ட நேரமாக மேற்கொண்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17 வயதான யுவதிக்கு அவரது தாயாரால் சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில் அது வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
உயிருடன் இருக்கும் ஒருவரிடம் பெற்று மற்றையவருக்கு பொருத்துவது எமது மண்ணில் மருத்துவ வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது.
சத்திர சிகிச்சை நிபுணர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தன் தலைமையிலான வைத்திய குழு இந்த சாதனை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியின் முயற்சியின் காரணமாக இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
