யாழ். போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
15 வயது சிறுவன்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுவனுக்கு கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பகுப்பாய்விற்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.