யாழ்.பல்கலைக்கழகத்தில் இருவருக்கு கோவிட் தொற்று
யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேற்பார்வையாளர் ஒருவர், மாணவி ஒருவர் என இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 89 பேருக்கு இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 88 பேர் மாணவர்கள் என்றும் ஒருவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணியாற்றும் கல்விசாரா ஊழியர் என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த உத்தியோகத்தர் தனக்கு நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் , தானாக பரிசோதனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றார்.
கடந்த வாரம் மற்றொரு ஊழியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,அவருடன் தொடர்பிலிருந்த ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
அவர் மூலமாகவே இன்று அடையாளம் காணப்பட்ட உத்தியோகத்தருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இதேவேளை அடையாளம் காணப்பட்ட மற்றையவர் வெளிமாவட்டம் ஒன்றினைச் சேர்ந்த மாணவி என்று தெரியவந்துள்ளது. இந்த மாணவியும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan