யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - திருமணத்தை அடுத்து ஏற்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் உறவினருக்கு திருமணம் முடிந்த நிலையில், அதற்காக அணிந்த தாலிக்கொடி உட்பட 18 பவுண் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டின் பின்னால் நுழைந்த திருடர்கள் பூட்டப்பட்டிருந்த வீட்டின் சமையலறை யன்னல் ஊடாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri