யாழில் விபரீத முடிவினால் பாடசாலை மாணவி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
பாசையூரை சேர்ந்த 19 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த குறித்த மாணவி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இம்மாணவியின், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |