இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி ஆளுநரை சந்தித்த கடற்றொழிலாளர்கள்
இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ். சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (8.2.2024) காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் போராட்டம்
தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அன்றைய தினம் அளுநர் யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியாது எனவும், 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இதன் அடிப்படையிலேயே இன்றையதினம் சந்திப்பு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam