யாழில் தவறான முடிவெடுத்துள்ள இளம் குடும்பஸ்தர்
யாழில்(Jaffna) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பொலிஸார்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் திகதி கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று, அந்த வீட்டில் உள்ள ஆட்டு கொட்டகையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
இதனை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலத்தை மீட்ட பொலிஸார்
சடலத்தை மீட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கொண்டு சென்றனர்.
இன்றையதினம் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
