யாழில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு : 30 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றைய தினம் (05.05.2024) மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக வவுனியா (Vavuniya) விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு திடீர் சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட நடவடிக்கைகள்
இதன்போது, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 35 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர்களிடமிருந்து 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam