மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகனை தரையில் அடித்த தந்தை: கொழும்பில் சம்பவம்
கொழும்பில் (Colombo) போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனை தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது சிறுவனைத் தனது கணவர் தரையில் அடித்து காயப்படுத்தியதாகப் பெண் ஒருவர் கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது , சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த 7 வயது சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam