ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர்: டக்ளஸ் கூறியது என்ன...!
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், யாழில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்காது புறக்கணித்துள்ளார்.
நேற்றைய தினம் (02.03.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடனடியாக ஊடகவியலாளர்களை உள்வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை எடுத்திருப்பேன்
கடந்த காலங்களில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது வழமை ஆனால் தற்போதைய அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், ஊடகங்களை அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் எனக்கு முன்கூட்டியே தெரியாது தெரிந்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பேன்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் நான் தான் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை
அனுமதிப்பது தொடர்பில் நான் தான் முடிவு எடுக்க முடியும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
