யாழ். மாவட்ட பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு (Photos)
யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் யாழ். பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் யாழ்ப்பாணப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (11.06.2023) காலை 8 மணி முதல், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் குறித்த பகுதியை சுத்தப்படுத்தும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகர சபையினர் குறித்த பகுதி சுத்தப்படுத்த தவறியதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார்
குறித்த பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.

யாழ்ப்பாண பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலை திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் கலந்து கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam