யாழ்ப்பாணம் ஒரு விசித்திரமான மாவட்டம்: யாழ். அரச அதிபர் விசனம்
நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்குவதாக அங்கலாய்ப்பினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான தீர்மானமிக்க விசேட கலந்துரையாடல் நேற்று (02.10.2023) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்ட ஒழுங்கு
அவர் மேலும் தெரிவிக்கையில், எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்குகளை பேணிப் பாதுகாக்கும் வகையில் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாட்டில் எங்கும் இல்லாத வகையில் சட்டத்துக்கு மாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒரு பகுதியினர் பழக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மரக்கறி சந்தைகளில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நிறைக் கழிவு முறைமை யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரமே காணப்படுகின்றது.
சட்டவிரோத மணல் அகழ்வு
அதேபோன்று பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற முச்சக்கரவண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தியிருக்க வேண்டுமென்பதும் நாடளாவிய ரீதியில் காணப்படும் சட்ட ஏற்பாடாக இருக்கின்ற போதிலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கு இங்குள்ளவர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டினுடைய சட்ட திட்டங்களை அனைவரும் ஏற்றுக் கொண்டு நடக்க தவறும் பட்சத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கும் என்று மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது, மணல் அகழ்விற்கு பொருத்தமான இடங்களில் இருந்து மணல் விநி யோகத்தினை மேற்கொள்ளவதற்கு காணப்படும் சவால்களைக் கட்டுப்படுத்துவது, சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவது முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்தும் செயற்பாடுகளை விரைவுபடுத்துவது உட்பட்ட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri