யாழில் ஆரம்பமாகவுள்ள இந்து சகோதரர்களின் சமர்
யாழில் "இந்து சகோதரர்களின் சமர் " எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஒன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியானது நாளை மற்றும் நாளை மறுதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நகரிலிருந்து பட்டினங்கள் நோக்கி நகரும் கிரிக்கெட் பாரம்பரியம் என இரு கல்லூரியின் அதிபர்களும் தெரிவித்ததுடன், வியாஸ்காந் போல சர்வதேச வீரர்களை நகரத்திற்கு வெளியே இருந்து எடுத்து செல்ல இது அடித்தளமாக அமையும் எனவும் இரு அணித்தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி : உயிருடன் இருப்பதாக தெரிவித்து சென்னை நீதிமன்றில் மேன்முறையீடு
துடுப்பாட்ட மோதல்
துடுப்பாட்ட சமர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் சர்வேஸ்வரன் “மானிப்பாய் இந்து கல்லூரி மற்றும் எமது சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன பெரும் சமர் ஒன்றினை ஆரம்பிக்கின்றோம்.
எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்த பெரும் சமர் இடம்பெறும். இந்து சகோதரர்களுக்கிடையிலான சமர் என்ற பெயருடன் (battle of Hindu brother ) இடம்பெறும்.
இரு
கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்ட மோதல் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு முதல்
தடவையாக இடம்பெறுகின்றது.
இவ்வருடம் மானிப்பாய் இந்துவிலும் வருகின்ற வருடம் சாவகச்சேரி இந்துவிலும் ஆரம்பமாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விசேட கிண்ணம்
“இந்த துடுப்பாட்டச் சமரினை வெற்றிகரமாக இவ்வருடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். இந்து சகோதரர்களின் சமர் என்று வர்ணிக்கப்படுகின்ற இந்தப் போட்டி இரண்டு நண்பர்களையும் இணைத்து நிற்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் பட்டினம் நோக்கியும், சாவகச்சேரி பட்டினம் நோக்கியும் இந்த போட்டி நகர்ந்திருப்பது வரலாற்று ரீதியாக பெருமை அளிக்கின்றது என்பதோடு இதற்கென விசேட கிண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
இந்த சமர் கிரிக்கெட்டில் சாதிக்க முனையும் வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்குவதாக அமையும். இந்த போட்டியின் காரணமாக இதுவரை கிரிக்கெட்டில் நாட்டமில்லாது இருந்த பல திறமையான மாணவர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள் என சாவகச்சேரி இந்துக்கல்லூரி துடுப்பாட்ட அணித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கின் பெரும் போர் ,இந்துக்களின் சமர் ,பொன் அணிகளின் போர் என நிறைய துடுப்பாட்ட சமர்களை பார்த்து வளர்ந்தவர்கள்.முதல் தடவையாக எமக்கு இந்து சகோதரர்களின் சமர் என்ற துடுப்பாட்ட சமரினை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு இரண்டு பாடசாலை சமூகத்திற்கும் நன்றி என மானிப்பாய் இந்துக்கல்லூரி அணித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
