யாழ் மாநகர சபையில் டக்ளஸிடம் சிக்கி - திக்கு முக்காடும் தமிழரசுக் கட்சி
வெளியான உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் அடிப்படையில் யாழ்.மாநகரசபை ஒரு திரிசங்கு நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ்.மாநகரசபையை ஆட்சியமைப்பதில் இலங்கை தமிழரசுக்கட்சியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் சுமந்திரன் அணி டக்ளஸ் அணியில் ஒரு சிலருடன் கூட்டணியமைக்க கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தில் யாழ்.மாநகரசபை மட்டுமே குழப்பத்தில் உள்ளது.
இவ்வாறு கூட்டணி அமைக்கப்பட்டால் டக்ளஸ் தேவானந்தா பிரதி மேயரை கேட்கவும் வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக சித்தார்த்தன் அணியின் ஆசனம், ஐக்கிய தேசிய கட்சியின் ஆசனம், டக்ளஸ் அணியின் 4 ஆசனங்களும் கிடைத்தால் தமிழரசுக்கட்சிக்கு மொத்தமாக 19 ஆசனங்கள் கிடைக்கப்பெறும்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
