யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று மாலை இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளையைச் சேர்ந்த இந்த மாணவர் வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார்.
இதனையடுத்து தம்புள்ளையிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாணவனின் தாயாருக்கு கொரோனா தொற்று உள்ளது என கண்டறியப்பட்ட நிலையில் மாணவனிடமும் மாதிரிகள் பெறப்பட்டன.
அவரது மாதிரிகள் உடனடியாக பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் உணவு வாங்கச் சென்ற ஆனைப்பந்தி உணவகம் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri