யாழ். மாணவி வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் பெண் வைத்தியரிடம் அத்துமீறல்
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, பெண் மருத்துவர் ஒருவரிடம் அத்துமீற முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்லேகலை தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, சிறைச்சாலை மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் ஒருவர் சென்றுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, அவரைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென மருத்துவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாகச் செயற்பட்டு கைதியைக் கட்டுப்படுத்தினர்.
இதனால், பெண் மருத்துவர் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வித்யா கொலை வழக்கில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை