யாழ். விளான் சந்தியில் இரு குழுக்களிடையே மோதல் - இருவர் வைத்தியசாலையில்
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் நேற்று, இரு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதுடன், ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதி இளவாலை பொலிஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர்கள் தூரத்துக்குள் காணப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ஆரம்பத்தில் பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே மோதல் இடம்பெற்றது.
நீதிமன்றில் முன்னிலை..
அதனைத் தொடர்ந்து இருவருக்கு சார்பாகவும் அங்கு வந்த இரண்டு குழுவினருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது.

இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் ஒருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri