யாழ். சுன்னாகம் பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் (Video)
யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் வன்முறை குழுக்கள் வாகனங்களால் மோதி விபத்தை ஏற்படுத்தி, வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வன்முறை குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இந்த மோதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று(24) பகல் சுன்னாகம் சந்திக்கு அண்மையில் இந்த பயங்கர மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயங்கர தாக்குதல்
கார் ஒன்றில் வந்த குழுவினரை, மற்றொரு வாகனமொன்றில் வந்த குழுவினர் தாக்கியுள்ளனர். தமது வாகனத்தினால் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, காருக்குள் இருந்த குழுவினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காருக்குள் இருந்த 4 பேர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலதிக செய்தி: தீபன்




விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam