யாழ் - சென்னை விமான சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினசரி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி விமான சேவை
இதற்கமைய குறித்த விமானமானது சென்னையில் இருந்து 9.35 க்கு புறப்படும் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்து 12.00 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ் - சென்னை விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறுகையில்,சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே இப்போது வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இயக்கப்படும் விமான சேவைகளின் விரிவாக்கத்தை ஜூலை 16 முதல் தினசரி இடம்பெறும்.
பல தசாப்தங்களாக செயலற்ற நிலையில் இருந்த இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்.
மேலதிக செய்தி-சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
