யாழிலிருந்து சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து - யாழ் இளைஞனின் பரிதாப நிலை(Video)
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதியின் கவனக்குறைவால் திருகோணமலை மொரவ பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இளைஞர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து - கதிர்காமத்திற்கு திருகோணமலை ஊடாக சுற்றுலா சென்ற பேருந்து இன்று (02.07.2023) அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33 வயது) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை மஹதிவுல்வெவ விகாரையில் இடம்பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி ஐவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் திருகோணமலையிலிருந்து-அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞர் ஒருவர் வீதியோரத்தால் நடந்து சென்று கொண்டிருந்த நபரை மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்-பதுர்தீன் சியானா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
