யாழில் நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் மீது நடுவீதியில் சரமாரியான கத்திக்குத்து தாக்குதல்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் இருவர் மீது நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் அண்ணன் - தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வழக்குக்காக குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது அவர்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது குறித்த பெண்ணின் கணவன், மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளியான காரணம்
இந்நிலையில் சந்தேகநபரான கணவனை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது சகோதரனே தன்னிடமிருந்து பிரித்ததாக கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.