யாழ்ப்பாணத்தின் பெருமை தாய்லாந்தில் – அவுஸ்திரேலிய கராத்தே அணியில் யாழ் வீரர்..
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார்.
இவர், இன்று(12) புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்றுள்ளார்.
கராத்தே பாடசாலைகள்
சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த ரத்னம் ரோஸி ஹரிந்த், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்து, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

அதன் பின்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிரிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ளதுடன், சென்செயாகவும் செயற்பட்டு வருகின்றார்.
மேலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கராத்தே பாடசாலைகள் ஊடாக 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.