மூலஸ்தானத்தில் விக்கிரகம் இல்லாத மர்ம ஆலயம்! (video)
யாழ்ப்பாணம் - அராலி ஆவாரம்பட்டி முத்து மாரியம்மன் ஆலயமானது நெடுங்காலமாக புதுமையும் பெருமையும் கொண்ட ஒரு ஆலயமாக திகழ்கின்றது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கடற்தொழிலில் ஈடுபட்ட கடற்தொழிலாளரொருவரின் வலையில் கல், சிலம்பு மற்றும் பிரம்பு போன்ற சில பொருட்கள் சிக்கியுள்ளன.
குறித்த பொருட்களை கற்தொழிலாளரொருவர் கொண்டு வந்து தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு சற்று இளைப்பாறியுள்ளார். அவர் இளைப்பாறிவிட்டு பார்த்த வேளை அந்த சிலம்பும் பிறம்பும் காணாமல் போயுள்ளது.
ஆலய வரலாறு
அதனைத் தொடர்ந்து அந்த ஊரில் இருக்கின்ற பெரியம்பிச் சாத்திரியர் என்பவரது கனவில் அம்பிகை தோன்றி, தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நாவல் மரத்தடியில் இருந்து ஒரு தேசிக்காயை போடுகின்ற பொழுது அது விழுகின்ற இடத்திலே தனக்கு ஆலயம் அமைத்து அங்கு அருவுருவ வழிபாடு நடைபெற வேண்டும் என அம்பிகை கனவிலே கூறியுள்ளமை செவிவழி கதையாக பரவியுள்ளது.
