யாழில் இளம் பெண்கள் இருவரை பலியெடுத்த கோர விபத்து! உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது 31) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்திற்கான காரணம்
இதன்போது காரில் பயணித்த நால்வர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் அதிவேகமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் -திலீபன்

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
