யாழ். கோப்பாய் விபத்தில் இளைஞன் மரணம்
யாழ்ப்பாணத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி தெற்கு - நீர்வேலியைச் சேர்ந்த 23 வயதுடைய இரத்தி னேஸ்வரன் பாவிதான் என்பவரே நேற்றுய தினம் (01.02.2023) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
தப்பிச் சென்றுள்ள கார் சாரதி
மயக்கமடைந்தவர் மீட்கப்பட்டு கோப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம்குமார் நேற்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார்
தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
