யாழில் விபத்தில் சிக்கி பெண்னொருவர் பலி
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் காயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam