யாழில் திருமணமாகி நான்கு மாதங்களேயான இளம் குடும்ப பெண் மரணம்
யாழில் திருமணமாகி நான்கு மாதங்களேயான இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தெல்லிப்பழை - மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
சம்பவத்தில் உயிரிழந்த பெண் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றைய தினம் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் நேற்றைய தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |