போலி விளம்பரத்தினால் பெருந்தொகை பணத்தை இழந்த யாழ்.இளைஞன்!
யாழில் போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஒருவர் பணத்தை இழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் செயற்படும் பொருட்களை ஒன்லைனில் விற்பனை செய்யும் விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக உள்ளதாகவும், அதன் விலை125,000 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த குறித்த இளைஞன் தொடர்பு இலக்கத்தினை தொடர்பு கொண்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால்,மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கின்றோம் என விளம்பரம் செய்தவர் உரையாடியுள்ளார்.
அதனையடுத்து குறித்த இளைஞன் மொத்த தொகையையும் வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது.
அதனையடுத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது , குறித்த விலாசம் போலியானது எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஏமாற்றப்பட்ட இளைஞன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
