இலங்கையில் குப்பையில் கிடக்கும் பலாப்பழம்! லண்டனில் 44,130 ரூபாய்க்கு விற்பனை
பிரித்தானிய கடை ஒன்றில் பலாப்பழம் ஒன்று 160 பவுண்ட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நாணயத்தின் பெறுமதியில் 44,130 ரூபாய்க்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கடைக்கு பிபிசி ஊடகவியலாளரான ரிகார்டோ சென்ரா சென்ற நிலையில், 160 பவுண்ட் பலாப்பழம் கண்ணில் பட்டுள்ளது.
பலாப்பழத்தை புகைப்படம் எடுத்தவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பரோ பொது வளாகத்தில் உள்ள ஒரு கடையிலேயே இந்த பலாப்பழம் 44,130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள டுவிட்டர் பயனாளிகள், வெப்ப மண்டல நாடுகளில் உள்ளவர்கள் பலாப்பழம் விற்று கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
இலங்கை உட்பட பல நாடுகளில் பலாப்பழம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரித்தானியாவில் ஏன் பலாப்பழம் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்று டுவிட்டர் பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை சுவிட்சர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் பலாப்பழம் பெருமளவு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.
1000 reais a jaca pic.twitter.com/oYDnOUKMvR
— Ricardo Senra (@ricksenra) February 12, 2022

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
