இத்தாலியில் இலங்கை சிறுவனின் கொடூரமான செயல் - வேலைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு நெருக்கடி
இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுவன் ஒருவர் இத்தாலியில் தனது காதலியை கொலை செய்த சம்பவத்தால் சர்ச்சை நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த கொடூர கொலையால் இலங்கையில் இருந்து இத்தாலி செல்பவர்களுக்கு கடும் நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுவன் தனது மிஷேல் என்ற 17 வயதான சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்தார் என கூறப்படுகின்றது.
30 யூரோக்கள் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதம் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் தற்போதுள்ள சட்டத்தின்படி, 18 வயதுக்கு அதிகரிக்காமல் இருந்தால், அது மைனர் என்ற பிரிவின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும் கொலை செய்யப்பட்ட மிஷேலும், சந்தேக நபரான இலங்கை சிறுவனும் 17 வயதானவர்கள் என்பதனால் இந்த கொலைக்கான தீர்ப்பு எப்படி வழங்கப்படும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. தீர்ப்பு குறித்து இன்னும் உறுதியான எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, கடந்த காலங்களில் இத்தாலியில் இலங்கையர்களால் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது இத்தாலியில் வாழும் மற்றும் பணிபுரியும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு மேலும் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலிக்கு செல்லவும் அங்கும் வேலை தேடவும் முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு இந்தப் பின்னணி மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.