இலங்கையர்களால் இத்தாலிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damano Francovigti இதனைத் தெரிவித்துள்ளார்.
மொழி மற்றும் தொழில்முறை அறிவுடன் இத்தாலிக்கு வந்து தொழில் பெறுவதன் மூலம், இலங்கையர்களை பாதுகாக்கப்படுவதற்கும் நேரடியாக வேலை வாய்ப்புகளை தேடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலவணி
இத்தாலியில் தாபோன் நகர சபையின் ஆளுநர் ரவேந்தா ஜெகநாதனின் தலையீட்டால், டொன் போஸ்கோ நிறுவனத்தில் தற்போது மூன்று துறைகளில் பயிற்சி பெற்று வரும் தொழிலாளர்கள் குழுவை முதல் முறையாக இத்தாலிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அந்நிய செலவணியாக டொலரை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும் என தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri