ஆளுநரை சந்தித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள வேழமாலிகிதன்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினருடன் வடமாகாண ஆளுநரை சந்தித்தமை தொடர்பாக தனது நிலைப்பாட்டையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன் என்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை குறிப்பிட்டார்.
விளக்க கடிதம்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினருடன் வடமாகாண ஆளுநரை சந்தித்தமை தொடர்பாக கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மேலும், தமிழரசுக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ. வேழமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
