இலங்கை வரலாற்றில் சுமந்திரன் நிகழ்த்திய சாதனை
நல்லாட்சி காலத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்ட சுமந்திரன் நாடாளுமன்றில் மத்திய வங்கி ஊழல் தொடர்பான பிரேரணை கொண்டு வரப்பட்ட பொழுது அதனை சபையில் விவாதம் செய்யாது தடுத்ததாக டிறிபேக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த பிரேரணை தமிழில் இல்லை எனக் கூறி ஒரு போதும் அந்த விவாதம் நடைபெறாது சுமந்திரன் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி என்ற வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படாமல் அரசாங்கத்துடன் இணைந்து பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டதாவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, சுமந்திரன் சரியாக தமது கடமைகளை செய்யாமல் தற்போது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய உடறுப்பு நிகழ்ச்சி,