திருகோணமலை மாநகர சபைக்கு புதிய மேயர் நியமனம்: வெளியான அறிவிப்பு
திருகோணமலை (Trincomalee) மாநகர சபை மேயராக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கந்தசாமி செல்வராசா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த குகதாசன், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரசு கட்சியினை சேர்ந்தவர்கள் ஒன்பது பேரும் ஒன்று கூடி திருகோணமலை மாநகர சபை மேயராக ஜனநாயக ரீதியாக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவாகி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மாநகர மேயர் பதவி
கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த கந்தசாமி செல்வராசா, ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலமாக என்னை மேயராக பரிந்துரை செய்து தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அத்துடன் மாநகர மேயர் பதவியின் பின் திருகோணமலை நகர அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும் அனுபவம் மூலமாக எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
