இனபிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியிடம் தமிழர் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை
தேசிய இனப்பிரச்சினை விடயத்தை விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்(Gnanamuththu Srineshan) தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த வாரம் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எமது நாடாளுமன்ற குழுத்தலைவர் சிறீதரன்(Sivagnanam Shritharan) தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பினையும் மேற்கொண்டிருந்தோம்.
இதன் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
அதில் முதலாவதாக தேசிய இனப்பிரச்சனை தொடர்பான விடயத்தை நியாயமான அடிப்படையில் மிகவும் விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம்.
அத்துடன் இராணுவத்தினராலும், குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிப்பு விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan