அமைச்சர்களின் வீடுகளில் எரிவாயு அடுப்பு வெடித்தால் நல்லது: சமந்த வித்யாரத்ன சீற்றம் (Video)
அமைச்சர்களின் வீடுகளில் எரிவாயு அடுப்பு வெடித்தால் நல்லது என்று நான் நினைக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyaratna) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நேற்றும் 12 இடங்களில் வெடித்துள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தை கூறுகின்றனர். கலவைக்குறைவாக உள்ளது என்கின்றனர். பயன்பாட்டிற்கு உதவாது என்கின்றனர். இரண்டும் ஒழுங்கான முறையில் கலக்கவில்லை என்கின்றார்கள்.
விளையாடுகின்றீர்களா என்று நான் கேட்கின்றேன்! எரிவாயுவின் கலவையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றால் அது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆய்வின் முடிவு என்ன? வெடிக்கின்றது, தீப்பிடிக்கின்றது, அழிகிறது. இந்த எரிவாயு சிலிண்டர்களை கொண்டு சென்று அமைச்சர்களின் வீடுகளில் வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
