கொவிட் தடுப்பூசியை தருவிப்பது மிகவும் அவசியமானது! மருத்துவ நிபுணர்கள்
கொவிட் தடுப்பூசியை தருவிப்பது மிகவும் அவசியமானது என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவது இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பு குறித்த ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளேயுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மருத்துவ நிபுணர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தயார் என்பதனை உலக சுகாதார ஸ்தாபனதிற்கு அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் கட்டுப்பாடு குறித்த தீர்மானங்களை எடுக்கும் போது விஞ்ஞானபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும், பீதியை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் சுதர்சனி தெரிவித்துள்ளார்.