ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை : ஆஷு மாரசிங்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை என்றும், ரணிலுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான ஆஷு மாரசிங்க(Ashu Marasinghe) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (14.06.2024) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பிரசாரக் கருத்துக்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் கால பிரசாரக் கருத்துக்கள் கவலையளிக்கின்றன. கடந்த தேர்தல் காலங்களின்போது எவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சஜித் பிரேமதாஸ எங்களிடம் கேட்டுள்ளார்.
ஏதேனும் பிரதேசம் ஒன்றுக்குச் செல்லும்போது அவர் உதவி கோருவார். நானும் அதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளேன். இதற்கான வாட்ஸ் அப் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் இல்லையென மறுக்க முடியாது. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.
இவ்வாறிருக்க அவரது அண்மைய யாழ்ப்பாணம் விஜயத்தின்போது அவருடைய கருத்துக்கள் உண்மையாகவே கவலையளிக்கின்றன. அவர் அவசர அவசரமாக ஜனாதிபதியாக நினைத்தால் கோட்டாபய வெளியேறிய காலத்துக்கு முன்னதாகவே வெளியேற நேரிடும்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்துப் பயனில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குவுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
