அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரும் உத்தேசம் கிடையாது - ஜே.வி.பி
அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேரும் உத்தேசம் எதுவும் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி கட்சி அறிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற மோசடியற்ற கட்சியொன்றுடன் கூட்டணி சேர முடியும் என ராஜாங்க அமைச்சரும், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் விஜித ஹேரத் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி சேர விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் அழைப்பினை விடுத்தமைக்காக அமைச்சருக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் அன்றி தனிப்பட்ட நபர்களுடன் இணைந்து கூட்டணி அமைத்துக் கொள்ள கட்சி விரும்புவதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri