சிறீதரனால் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்,
• கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் காணிகளை இராணுவம் சுவீகரித்து வைத்திருக்கிறது. அதை விடுவிக்கத் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
• கிளிநொச்சி பொது நூலகத்திற்கான காணியையும் இராணுவம் சுவீகரித்து வைத்திருக்கிறது. அதை விடுவிக்கத் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
• அக்கராயன் கரும்புத் தோட்டத்தின் காணியைத் தனிநபர்களுக்கு வழங்க முடியாதெனவும் அது கூட்டுறவுச் சங்கத்திற்கே வழங்கப்பட வேண்டும்.
• விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும். காரணம் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இம்முறை அதிக விளைச்சலைப் பெறமுடியாமல் போயுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.
* சட்ட விரோதமான மண் அகழ்வினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* ஐ ரோட் திட்டத்தை மிக வேகமாகத் துரிதப்படுத்த வேண்டும். பல்லவராயன் கட்டுவன்னேரி வலைப்பாடு வேரவில் கிராஞ்சி ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் கிளிநொச்சி நகருக்கு வருவதில் பாரிய இடையூறுகளை எதிர்கொள்கின்றனர் எனவும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் இந்த திட்ட வீதிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை.
* காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிளிநொச்சி மன்னார் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களின் அலுவலகம் அனுராதபுரத்திற்கு மாற்ற அனுமதிக்க முடியாது எனவும் மீள அதை யாழ்ப்பாணத்திற்கு அதைக் கொண்டு வரவேண்டும் எனவும் அல்லாது போனால் இந்த4 மாவட்டங்களுக்கும் பொதுவாக மாங்குளத்தில் அதன் அலுவலகம் திறக்கப்படவேண்டும். அநுராதபுரத்திற்கு மாற்றுவதன் நோக்கம் வேறு சில நோக்கங்களை அடைவதற்காக மாத்திரமே எனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் குறிப்பிடப்பட்டது.
*கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்த ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் . குறிப்பாகப் புதிதாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வியற்கல்லூரியில் இருந்தும் பல்கலைக்கழகத்திலிருந்து புதிதாக ஆசிரியராக நியமனம் பெறுபவர்கள் எமது மாவட்டத்திற்கே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டது.
















பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
