பிரித்தானியாவில் மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியீடு
பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாணயங்களை அதிகாரபபூர்வமாக தயாரிக்கும் ராயல் மின்ட் நிறுவனம் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ம் திகதி தனது 96 வயதில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார்.
சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும்
இந்த நிலையில் மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாணயங்களும் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது.
மறைந்த ராணி 2ம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாவும், அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 16 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan
