தரமற்ற ஊசிகள் இறக்குமதி விவகாரம்! மூவர் கைது
இம்யூனோகுளோபுலின் இறக்குமதி விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட மூவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மருத்துவர் கபில விக்கிரமநாயக்கவை தவிர்த்து, நிரன் தனஞ்சய (கணக்காளர் - விநியோகம்), உதவி பணிப்பாளர் சாந்தி சாலமன் மற்றும் மருந்தாளுநர் சுஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர.
போலி ஆவணங்கள்
போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Isolez Biotech Pharma AG (Pvt.) Ltd என்ற உள்ளூர் மருந்து விநியோக நிறுவனம், போலி ஆவணங்களை பயன்படுத்தி மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) ஒரு தொகுதியை இறக்குமதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை இலங்கை சுங்கத்துறை கண்டுபிடித்தது.
கைது நடவடிக்கை
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி மாளிகாகந்த நீதவான், விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கினார்.
இதனையடுத்து ஒரு முழுமையான விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறை ஆரம்பித்தது.
இதன் விளைவாக தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்த உள்ளூர் நிறுவனத்தின் உரிமையாளரை முதற்கட்டமாக கைது செய்தது.
இதன் தொடர்ச்சியாகவே நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
