மட்டக்களப்பில் அபாயத்தில் உள்ள பாரிய மரத்தால் ஏற்பட்ட பெரும் பரபரப்பு
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரத்தை வெட்டுவதற்கு பள்ளிவாசல் நிருவாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியில்,பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பள்ளிவாசலுக்கு முன்னால் வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று பழுதடைந்து முறிந்து விழும் அபாயநிலையில் காணப்படுகின்றது.
மரக்கூட்டுத்தாபனத்திக்கு அனுமதி
இந்நிலையில், பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மட். வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கல்விகற்று வருவதாகவும், அரசகாரியாலயங்கள் நீதிமன்றம் போன்ற காரியாலயங்களுக்கு அந்த மரத்தின் கீழ் உள்ள வீதியால் நாளாந்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பிரயாணம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மரம் விழும் அபாயத்தையடுத்து வீதியால் பிரயாணிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுடன் பிரயாணித்து வருவதாகவும், இதனால் குறித்த மரத்தை அகற்றுமாறும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கமைய குறித்த மரம் வீதி அதிகார சபையின் எல்லைக்குள் இருக்கின்ற நிலையில் இதனை அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலாளர், மரநகரசபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மரத்தை பார்வையிட்டு, மரம் முறிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பாரிய அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதனை முற்றாக அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச செயலாளரார் மரத்தை அகற்றுவதற்கு மரக்கூட்டுத்தாபனத்திக்கு அனுமதியும் வளங்கியுள்ளார்.
பெரும் பதற்ற நிலை
இதனையடுத்து சம்பவதினமான இன்று(14.10.2023) பகல் 11 மணிக்கு மரத்தை வெட்டி அகற்றுவதற்காக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் வீதி அதிகாரசபை பணிப்பாளர் மற்றும் மரம் வெட்டும் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அதனை வெட்டவிடாது தடுத்து நிறுத்தியதையடுத்து அங்கு பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஒன்று திரண்டதுடன், முஸ்லிம்களும் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் பாதுகாப்பு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மரத்தை முற்றக அகற்றுமாறு பிரதேச செயலாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri