இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! ஏழு மடங்காக உயர்வு
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை தற்போது மிக வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியின் விளைவு
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏழு மடங்காக அதிகரித்துள்ள கடவுச்சீட்டு விநியோகம்
அத்துடன் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வருடம் முழுவதுமே ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 168 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டு வந்தன.
எனினும், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 7 இலட்சத்திற்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.
இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் கடவுச்சிட்டினை பெற்றுக்கொள்வதற்காக ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.